திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்ய வரும் 8-ம் தேதி வரை படிவங்கள் வழங்கலாம் : மாவட்ட தேர்தல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

பதிவு:2022-12-02 16:27:13

திருவள்ளூர் டிச 02 : திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும், 01.01.2023-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி கடந்த 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய தினங்களில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 3657 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற இச்சிறப்பு முகாம்களில் படிவம் 6 - 50247-ம், படிவம் 7 - 7406-ம் மற்றும் படிவம் 8 - 17145 -ம் ஆக மொத்தம் 74798 படிவங்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், மற்ற தினங்களில் படிவம் 6 - 2767-ம், படிவம் 7 - 1938 -ம் மற்றும் படிவம் 8 - 633 -ம் ஆக மொத்தம் 5338 படிவங்கள் பெறப்பட்டுள்ளது. இச்சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளத் தவறிய பொதுமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்கம் மற்றும் திருத்தங்களுக்கு உரிய படிவங்களை பூர்த்தி செய்து நேரடியாக தங்கள் பகுதியிலுள்ள நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அல்லது சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் டிசம்பர் 8-ம் தேதி வரை அனைத்து அலுவலக நாட்களிலும் வழங்கலாம். மேலும், NVSP Portal என்ற இணையதளம் மற்றும் Voters Helpline என்ற App மூலமாக விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் விபரங்கள் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-ஐ தொடர்பு கொள்ளலாம். இச்சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் நிறைவு பெற்று எதிர்வரும் 05.01.2023 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.