திருவள்ளூரில் சட்ட மாமேதை டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை :

பதிவு:2022-04-16 23:28:49



திருவள்ளூரில் சட்ட மாமேதை டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை :

திருவள்ளூரில் சட்ட மாமேதை டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை :

திருவள்ளூர் ஏப் 16 : சட்ட மாமேதை டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே உள்ள சட்ட மாமேதை டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாநில செயல் தலைவர் எஸ்.மாரிமுத்து தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் உட்பட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில செயல் தலைவர் எஸ்.மாரிமுத்து தலைமை தாங்கினார்.பூண்டி ஒன்றிய தலைவர் மணியரசு,மாநில செயலாளர் தேவதாஸ்,மாவட்ட தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக எம்.பி.ஜெயக்குமார்,திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன்,நிர்வாகி ஜான் ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து மாநில சட்டமன்ற வளாகங்களில் அம்பேத்கர் முழு உருவச்சிலை அமைக்க வேண்டும், அனைத்து மாநிலங்களிலும் தலித்துகளுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பூபதி,தமிழர் பேரரசு கட்சி நிறுவன தலைவர் செவ்வை கே.கணேசன்,மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் சரஸ்வதி சந்திரசேகர், சிவசங்கரி உதயகுமார்,திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பொன்.பாண்டியன்,வழக்கறிஞர் நீளவானத்து நிலவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதேபோல் மாவட்டம் முழுவதும் அதிமுக,பாஜக,காங்கிரஸ்,பகுஜன் சமாஜ்,புரட்சி பாரதம்,விடுதலை சிறுத்தைகள் கட்சி,விஜய் மக்கள் இயக்கம் என அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினர் சட்ட மாமேதை டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.