பதிவு:2022-12-02 16:30:22
திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 93 கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வரும் 4 ம் தேதி எழுத்துத் தேர்வு : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் டிச 02 : திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலகில், காலியாக உள்ள 93 கிராம உதவியாளர் பணியிடம் நிரப்ப, இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் வரும் டிசம்பர்-4 ம் தேதி காலை 10 மணிக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படவுள்ளது.
:
இதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தில் காக்களூர் மற்றும் திருவள்ளூரில் உள்ள கலவலக் கண்ணன் செட்டி இந்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்கோட்டை விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமுல்லைவாயல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பூவிருந்தவல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரி, பள்ளிப்பட்டு செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஆர்.கே.பேட்டை ஸ்ரீ அய்யன் வித்யாஸ்ரம் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி கோஜன் ஸ்கூல் ஆப் பிசினஸ் அன்டு டெக்னாலஜி, ரெட்ஹில்ஸ், கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி மஹரிஷி வித்யா மந்திர்பள்ளி (குரூப் ஆப் ஆர்விஎஸ் பத்மாவதி காலேஜ் காம்பஸ்) ஆகிய பள்ளிகளில் தேர்வு நடைபெறும்.
:
விண்ணப்பதாரர்களுக்கு கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் வழிமுறைப்படி அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து தேர்வெழுத காலை 09.30 மணிக்குள் வரவேண்டும்.
மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் பதிவஞ்சலில் தேர்வு அனுமதி சீட்டு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.