பதிவு:2022-12-02 16:32:48
திருத்தணியில் அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி மது வாங்கி குடித்து கலாட்டா : பேருந்து நிலைய நேரக் காப்பாப்பாளர் அறையை அடித்து நொறுக்கியதால் பூட்டி வைத்து போலீசில் ஒப்படைப்பு :
திருவள்ளூர் டிச 02 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்தவர் வடிவேலு. 37 வயதான வடிவேலு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக பிரமுகரை கொலை செய்த வழக்கு உள்ளிட்ட 12 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். தேடப்படும் குற்றவாளியாக இருந்த வடிவேலு இன்று திருத்தணி பேருந்து நிலையத்தில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் மதுவை வாங்கி குடித்த வடிவேலு, பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
:
அதனைத் தொடர்ந்து பேருந்து நிலைய நேரக்காப்பாளர் அறைக்கு சென்ற வடிவேலு, அங்கேயே மேலும் மதுவை குடித்துவிட்டு அங்கிருந்த மேஜை உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளார். இதனையடுத்து அந்த அறையில் வைத்து பூட்டி திருத்தணி போலீசாருக்குகொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்து வடிவேலுவை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
:
திருத்தணி பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமாக மது பான விற்பனையில் ஈடுபடுவதால் அங்கேயே மதுவை வாங்கி குடித்து விட்டு, ரகளையில் ஈடுபட்டதால் அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.