ஆந்திராவில் கொத்தடிமையாக இருந்த சிறுமி அனிதாவை மீட்டு அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பில் சேர்த்த திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் :

பதிவு:2022-12-02 16:36:22



ஆந்திராவில் கொத்தடிமையாக இருந்த சிறுமி அனிதாவை மீட்டு அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பில் சேர்த்த திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் :

ஆந்திராவில் கொத்தடிமையாக இருந்த சிறுமி அனிதாவை மீட்டு அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பில் சேர்த்த திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் :

திருவள்ளூர் டிச 02 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த மத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட கொத்துார் இருளர் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி கங்கா. இவர்களுக்கு அனிதா,13 என்ற மகள் உள்ளார். கொத்துார் கிராமத்தில் இயங்கி வந்த ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை படித்து வந்தார். பின் கொரோனா தொற்று காரணமாக பள்ளிக்கு தொடர் விடுமுறை என்பதால் அனிதா மற்றும் அவரது பெற்றோர் ஆந்திர மாநிலம், நகரி பகுதியில் அனுமந்தராவ் என்பவருக்கு சொந்தமான மாங்காய் தோப்பில் தங்கியிருந்து கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனர். :

இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தகவல் அறிந்த ஆந்திர மாநிலம், நகரி வருவாய் கோட்டாட்சியர் சுதினா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொத்தடிமைகளாக இருந்த கோவிந்தசாமி, கங்கா மற்றும் அனிதா ஆகியோரை மீட்டு, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹஸ்ரத் பேகத்திடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து, அனிதாவை கோட்டாட்சியர் ஹஸ்ரத்பேகம், திருத்தணி அரசினர் மகளிர் மேல் நிலைப் பள்ளியில் மீண்டும் கல்வி கற்க ஏற்பாடு செய்தார். :

நேரடியாக மாணவி மற்றும் அவரின் பெற்றோருடன் பள்ளிக்கு நேரடியாக சென்று எட்டாம் வகுப்பில் சேர்த்தார். மேலும் மாணவி அனிதாவிற்கு தேவையான புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் தங்கும் விடுதி வசதி ஆகியவற்றையும் கோட்டாட்சியர் ஏற்பாடு செய்தார். நன்றாக படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்றும் மாணவியை வாழ்த்தினார்.