பதிவு:2022-12-02 16:38:05
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காகசெம்பரம்பாக்கம் ஏரிக்கு 255 கன அடி நீர் வெளியேற்றம் :
திருவள்ளூர் டிச 02 : திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த வட கிழக்கு பருவ மழை மற்றும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர் ஆகியவற்றால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது.
:
அதன்படி நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் தற்போது 2376 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது .ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் மற்றும் வரத்துக் கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர் என மொத்தம் 580 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக இணைப்புக் கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 255 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.