பதிவு:2022-12-02 16:46:32
திருவள்ளூர் அடுத்த மோவூரில் மீன் பண்ணையில் இருந்து வெளியேறும் நீர் விவசாய நிலத்தில் பாய்ந்ததால் விவசாயம் செய்ய முடியாமல் அருகிலுள்ள விவசாயிகள் வேதனை : பாமக ஒன்றிய செயலாளராக இருக்கும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என மீன்பண்ணை நடத்துபவர் மிரட்டல் :
திருவள்ளூர் அடுத்த மோவூரில் மீன் பண்ணையில் இருந்து வெளியேறும் நீர் விவசாய நிலத்தில் பாய்ந்ததால் விவசாயம் செய்ய முடியாமல் அருகிலுள்ள விவசாயிகள் வேதனை : பாமக ஒன்றிய செயலாளராக இருக்கும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என மீன்பண்ணை நடத்துபவர் மிரட்டல் :
திருவள்ளூர் டிச 02 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மோவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தில் தற்போது வேர்க்கடலை சாகுபடி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் இவரது விவசாய நிலத்திற்கு அருகில் மீன் பண்ணை ஒன்று உள்ளது. பாமக பூண்டி ஒன்றிய செயலாளரான ஏழுமலை என்பவருக்கு சொந்தமான இந்த மீன் குட்டையில் இருந்து தண்ணீர் வெளியேறி பாலகிருஷ்ணன் மற்றும் வேறு சிலரின் விவசாய நிலத்தில் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலம் முழுவதும் நீரால் நிரம்பி காணப்படுவதால் வேர்க்கடலை போன்ற பயிர் செய்ய முடியாமல் விவசாயி பாலகிருஷ்ணன் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இது குறித்து மீன்குட்டை நடத்தி வரும் ஏழுமலையிடம் சென்று கேட்ட போது, அப்படித்தான் தண்ணீர் வெளியேறும். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். நான் சொன்னால், ஆயிரம் பேர் வருவாங்க... என்னை ஒன்னும் செய்ய முடியாது... உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று தகராறு செய்வதால் பென்னாலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் விவசாயிக பாலகிருஷ்ணன் புகார் கொடுத்துள்ளார்.
விவசாய நிலத்தின் அருகே மீன் குட்டை அமைத்திருப்பதால் தண்ணீர் மாசந்து நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதால் குடிநீரும் துர்நாற்றம் அடிப்பதாகவும், இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.