திருவள்ளூரில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி 50 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

பதிவு:2022-12-02 16:51:57



திருவள்ளூரில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி 50 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

திருவள்ளூரில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி  50 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

திருவள்ளூர் டிச 02 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நடைப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பேரணியில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக மாணவ மாணவிகள் சென்ற நடைப் பேரணி காமராஜர் சிலை அருகே நிறைவு பெற்றது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக உலக எய்ட்ஸ் தின விழாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும் சுய தொழிலை ஊக்குவிக்கும் விதமாகவும் 30 பயனாளிகளுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்களையும் 20 பயனாளிகளுக்கு ரூ.2.16 லட்சம் மதிப்பீட்டில் இலவச வெள்ளாடுகளையும் என 50 பயனாளிகளுக்கு ரூ.4.26 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கி பேசினார்.

அப்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்கும் 29 நம்பிக்கை மையங்களில் எச்.ஐ.வி பரிசோதனை இலவசமாக செய்யப்பபடுகிறது. ஏ.ஆர்.டியில் சிகிச்சை பெறுபர்களின் பொருளாதார நிலையை உயர்த்த சென்ற ஆண்டு தொண்டு நிறுவனங்கள் மூலம் 7 நபர்களுக்கு ஆடுகளும், 21 நபர்களுக்கு தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது. அதனை மாதாந்தோறும் ஆய்வு செய்ததன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதை கருத்தில் கொண்டு, அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் ஷெல்ட்டர் டிரஸ்ட் மூலமாக 30 பெண்களுக்கு தையல் இயந்திரமும்,ரோட்டரி கிளப் ஆப் சென்னை- மாதவரம், ரோட்டரி கிளப் ஆப் சென்னை பிரஸ்டிஜ், ரோட்டரி கிளப் ஆப் சென்னை சன்ரைஸ் சங்கம் மூலம் 20 நபர்களுக்கு தலா இரண்டு வெள்ளாட்டு ஆட்டுக்குட்டிகளும் வழங்கப்படுவதன் மூலமாக 50 குடும்பங்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்துக்கொள்ள உதவுகிறது என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும் தொழில் ரீதியாக அவர்களை முன்னேற்றமடையும் விதமாகவும் சிறப்பு சுய உதவி குழுவிற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம் மற்றும் என்.டி.இ.சி.எல். நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதி ஆகியவற்றின் சார்பாக ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பீனிக்ஸ் நாற்றங்கால் பண்ணையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைக்கும் விதமாக உரிய தொகையை வழங்கி குழுவினரிடமிருந்து நாற்றுகளை பெற்றுக்கொண்டு, அவ்வாளகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.

பின்னர் ரோட்டரி கிளப் ஆப் திருவள்ளூர் ராயல்ஸ் மூலமாக அரசு மருத்துவ கல்லூரி இரத்த வங்கிக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருவள்ளூர் மூலம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் சகோதரத்துவத்தோடு சரிசமமாக அமர்ந்து உணவருந்தும் விதமாக நடைபெற்ற சமபந்தி போஜனத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு உணவருந்தினார்.

இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், மூத்த உரிமையியல் நீதிபதி சாண்டில்யன், திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவத்ஷன், இணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) செல்வகுமார், துணை இயக்குனர்கள் ஜவஹர்லால் (சுகாதாரப் பணிகள்), லட்சுமி முரளி (காச நோய்), மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்டம் மேலாளர் (பொ) .கே.எஸ்.கௌரி சங்கர், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், சந்திரசேகர், ஐ.சி.டி.சி. மேற்பார்வையாளர் பபிதா, உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு சுய உதவி குழு உறுப்பினர்கள், களப்பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.