பதிவு:2022-12-03 21:00:21
புழல், மத்திய சிறை-2ல் காலியாக உள்ள இரண்டு தூய்மை பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் :
திருவள்ளூர் டிச 03 : திருவள்ளூர் மாவட்டம், புழல், மத்திய சிறை-2ல் காலியாக உள்ள இரண்டு தூய்மை பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கு தமிழில் எழுத, படிக்க மற்றும் பணியில் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 01.07.2022 அன்று 18 வயது நிரம்பிய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களைத் தவிர) இனத்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு அதிகபட்சமாக 01.07.2022 அன்று பி.சி - 34, எம்.பி.சி – 34 வயதிற்குள் இருத்தல் வேண்டும். துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு ரூ.15700-58100 என்ற ஊதிய விகித அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் 10.12.2022-ம் தேதிக்குள் சிறைக்கண்காணிப்பாளர்,மத்தியசிறை-2(விசாரணை), புழல், சென்னை - 66. தொலைபேசி எண்:044 26590350 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும். 10.12.2022 மாலை 5 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என சிறைக் கண்காணிப்பாளர், மத்திய சிறை-2, புழல் தெரிவித்துள்ளார்.