பதிவு:2022-12-03 21:12:02
திருத்தணியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விளைச்சல் குறைந்தால் மல்லிகைப்பூ ஒரு கிலோ 2000 ரூபாயாக உயர்ந்தது :
திருவள்ளூர் டிச 03 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தாழவேடு அருங்குளம் மாமண்டூர் பொன்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பூக்களை அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர்.
இந்த கிராமங்களில் விளைச்சல் செய்யப்படும் பூக்கள் திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். கோயில் நகரமான திருத்தணியில் திருமண மண்டபங்கள் அதிக அளவில் இருப்பதால் திருமண நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெறும். இதனால் பூக்கள் அதிகளவில் இங்கு விற்பனை செய்யப்படும். அதே போல் ஆயிரக்கணக்கான பக்தர்களும் முருகன் கோயிலுக்கு வருகை தருவதால் பூக்கள் அதிகளவில் விற்பனையாகும்.
இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பூக்களின் விளைச்சல் வெகுவாக குறைந்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் ஒரு கிலோ 400 முதல் 500 ரூபாய் வரை விற்று வந்த மல்லிகைப்பூ தற்போது விளைச்சல் குறைந்ததால் 2000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.