பதிவு:2022-12-03 21:22:22
திருத்தணியில் பட்டப்பகலில் மது போதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் பாஸ்ட் புட் கடையில் இருந்த கடாயை எடுத்து தலையில் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு :
திருவள்ளூர் டிச 03 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஸ்டாலின் நகரைச் சேர்ந்த குமரேசன் மற்றும் அனுமந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்கிற லோகேஷ் ஆகிய இருவரும் நண்பர்கள். கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி இவர்கள் இருவரும் திருத்தணி பேருந்து நிலையம் அருகில் கள்ளச்சந்தையில் பார்த்திபன் என்பவர் மது பானம் விற்பனை செய்வதை வாங்கி அருந்தியுள்ளனர்.
அப்போது மது போதையில் முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியாக சென்ற இளைஞனின் செல்போன் மற்றும் ரூ.500 பிடுங்கி தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குமரேசன் என்பவன் செல்போனை திரும்ப அந்த இளைஞனிடமே கொடுத்ததால் குமரேசன் மற்றும் ஜெகன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு மோதலாக மாறியதால் அருகில் இருந்த பாஸ்ட்புட் கடையில் இருந்த கரண்டியை எடுத்த குமரேசன் என்பவன் ஜெகனை கையில் தாக்கியுள்ளான்.
இதில் பலத்தகாயம் அடைந்த ஜெகன் அருகில் இருந்த கடாயை எடுத்து குமரசேன் தலையில் பலமாக தாக்கியதில் அவன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தான். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு குமரேசனை கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். முதல் சிகிச்சைக்குப் பின் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்துதிருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெகன் என்றகிற லோகேஷ்- மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்த குமரேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஜெகன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்த திருத்தணி போலீசார் குமரேசன் இறந்ததைகளுக்கு கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.