திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம் :

பதிவு:2022-12-03 21:25:59

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம் :

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம் :

திருவள்ளூர் டிச 03 : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை 38 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு திருத்தணி அரக்கோணம் பள்ளிப்பட்டு உட்பட 7 கரும்பு கோட்டங்களில் இருந்து கரும்பு வரவழைக்கப்பட்டு அரவை செய்யப்படுகிறது.இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கரும்பு அரவை 2.25 லட்சம் டன்னாக நிர்ணயிக்கப்பட்டு பால்வளத்துறை அமைச்சரால் கடந்த மாதம் 28 ல் அரவை தொடங்கப்பட்டது.

இந்நிலையில் 38 ஆண்டுகளாக சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் ஆண்டுக்கு 15 நாட்கள் பணிக்கொடை தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்க்கரை ஆலை முன் அமர்ந்த 110 தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் மலர்விழி மற்றும் திருத்தணி ஆர்டிஓ ஹஸ்ரத் பேகம் உள்ளிட்டோர் தொழிலாளர்களுடன் பேச்சு நடத்தினர்.

சர்க்கரை துறை ஆணையர் மற்றும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதுகுறித்து தீர்வு காணப்படாத பட்டசத்தில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தொழிலாளர்கள் எச்சரித்தனர்.