கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கோலாகல கொண்டாட்டம்.

பதிவு:2022-04-17 12:29:12



கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திற்கு உட்பட்ட தண்டலை பகுதியில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்.

கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கோலாகல கொண்டாட்டம்.

கள்ளக்குறிச்சி ஏப்ரல் 17 சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நாடெங்கிலும் ஏப்ரல் 14 கொண்டாடப்பட்து இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திற்கு உட்பட்ட தண்டலை கிராமத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கீழனூர் எஸ்.சுந்தர் தலைமையில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட நண்பர்கள் குழு ரமேஷ்குமார், சதீஷ்குமார், கோகுல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் நிர்வாகிகள் விமர்சியாக கொண்டாடினர். இந்நிகழ்ச்சிகள் அசோக் விஜயகுமார், பார்த்தசாரதி, மணிகண்டன், சூரியகிருஷ்ணன், சிபினாத், சதீஷ், விஜி, அஸ்வின், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.