பதிவு:2022-12-05 13:41:00
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாளில் அம்மா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை : ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம்
திருவள்ளூர் டிச 05 : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி தமிழக முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.அதன்படி திருவள்ளூர் எம்ஜிஆர் சிலை அருகே முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினார். மேலும் அதிமுகவை சேர்ந்த அடிமட்ட தொண்டன் சிவலிங்கம் என்பவருக்கு 20 ஆயிரம் மதிப்பிலான தள்ளு வண்டியையும் மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன் வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.ஏ.நேசன் கவுன்சிலர்கள் மூ.நரேஷ்குமார், எல்.செந்தில்குமார்,, விஜயதேவி பாபு, டி.விஜயபாபு, சுந்தரேசன், வெங்கடேசன், ஜெயச்சந்திரன், சீனிவாசன், மஞ்சுளா ஏழுமலை, ராமதாஸ், அண்ணாதுரை, ராகவன், வளையாபதி, நாகம்மாள் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் திருத்தணியில் உள்ள புரட்சித்தலைவி அம்மா சிலை மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதிமுக அமைப்பு செயலாளருமான திருத்தணி கோ.ஹரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர். இதில் ஆவின் தலைவர் ரவிச்சந்திரன், இளைஞர் அணி ஜெயசேகர்பாபு உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். அதே போல் திருத்தணி நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் அதிமுகவினர் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.