பதிவு:2022-12-05 13:56:01
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற 93 கிராம உதவியாளர் பணியிடத்திற்கு 6442 பேர் தேர்வு எழுத அனுமதி 4757 பேர் பங்கேற்பு. 1685 பேர் ஆப்சென்ட் :
திருவள்ளூர் டிச 05 : திருவள்ளுர் மாவட்ட வருவாய் அலகில், காலியாக உள்ள 93 கிராம உதவியாளர் பணியிடம் நிரப்ப, இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.அதன்படி இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 மையங்களில் தேர்வு நடைபெற்ற தேர்வுக்கு 6442 பேர் விண்ணப்பித்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டு 11 மணி வரை நடைபெற்றது. தேர்வர்கள் முழு சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் 6642 பேர் தேர்வு எழுத அனுமதித்திருந்த நிலையில் 4757 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். 1685 பேர் ஆப்சென்ட் ஆனதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்