பதிவு:2022-12-05 14:02:14
திருத்தணி அருகே வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 51 கிலோ குட்கா பறிமுதல் : ஒருவர் கைது
திருவள்ளூர் டிச 05 : தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையை அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி வாகன சோதனை, கடைகளில் சோதனை என போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருத்தணி அடுத்த பாப்புரெட்டிபள்ளியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்திருப்பதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மேற்கண்ட சோதனையில் பாண்டியன் என்பவர் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 51 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.