திருவள்ளூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டத்தில் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு வழங்கப்படும் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தீர்மானம்

பதிவு:2022-12-06 13:37:38

திருவள்ளூர் டிச 06 : திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் மற்றும் எம் எஸ் எஃப் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட தலைவர் யாசின் மௌலானா தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர், மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப், மாநில செயலாளர் கே. எம். நிஜாமுதீன், மாவட்டச் செயலாளர் ஏ ஆர் எம் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்தும் எம்.எஸ். எப் நிர்வாகிகள் தேர்வு குறித்தும் உரையாற்றினர்.

இதை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை தீவுத்திடலில் நடைபெறும் தாய்ச் சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 75- ஆம் ஆண்டு பவள விழா தேசிய மாநாடு வெற்றி பெறவும், அந்த மாநாட்டில் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் அதிக அளவில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பங்கேற்பது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் மாநாட்டை முன்னிட்டு தெருமுனை கூட்டம் நடத்துதல் சுவர் விளம்பரம் செய்தல் உள்ளிட்ட தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மேலும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட முஸ்லீம் மாணவர் பேரவையின் நீண்ட நாள் கோரிக்கையான திருவள்ளூர் நகரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். முஸ்லிம் சமுதாய மக்களுக்கு வழங்கப்படும் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஐந்து சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, மாநில ஒருங்கிணைப்பாளர் சல்மான் முகமது, மாநிலத் தலைவர் பழவை அன்சாரி, மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயித்தூன், ரஹ்மான் உசேன், முகமது மீரான், உமர் பாரூக், ஏ.ஆர் எம். நூர் முகமது உள்ளிட்ட ஏராளமானோர் கொண்டனர்.