திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் மாணவ மாணிவயர் மற்றும் பொது மக்களுக்கும் இடையூறாக உள்ள 2 அரசு டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

பதிவு:2022-12-06 13:43:11



திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் மாணவ மாணிவயர் மற்றும் பொது மக்களுக்கும் இடையூறாக உள்ள 2 அரசு டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் மாணவ மாணிவயர் மற்றும் பொது மக்களுக்கும் இடையூறாக உள்ள 2 அரசு டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

திருவள்ளூர் டிச 06 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பேரம்பாக்கம் கிராமத்தின் பிரதான நுழைவு பகுதியில் எதிரெதிர் திசையில் இரண்டு அரசு மதுபான டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையானது அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் சாலையில் உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடை உள்ளதால் மதுவை வாங்கும் மது பிரியர்கள் சாலையிலேயே அமர்ந்து மது அருந்திவிட்டு போதையில் சாலையிலேயே அரை நிர்வாண கோலத்தில் படுத்து புரண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த வழியில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் இந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர்கள், இளம் பெண்கள், முதியோர்கள் என பலதரப்பட்ட மக்களும் இந்த மது போதையர்களால் அவதிக்குள்ளாகின்றனர். மது பாட்டில்களை வாங்கும் மது பிரியர்கள் சாலையோரம் அமர்ந்து மது அருந்தி பாட்டில்களை திறந்தவெளியில் வீசி பார் போல் பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தே.மு.தி.க கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் தலைமையில், கிழக்கு ஒன்றிய செயலாளர் மணவாளன், தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், வழக்கறிஞர் அணி துணை செயலாளர் யுவராஜ், மாவட்ட நிர்வாகி தியாகராஜன், கருணாகரன், சதீஷ் குமார், சரவணன், சுரேஷ், முரளிதரன் உட்பட தே.மு.தி,க நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் மனுவை அளித்தனர்.

பேரம்பாக்கத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கும், பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள இரண்டு அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் வேறு இடத்தில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.