பதிவு:2022-12-06 13:45:55
திருவள்ளூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் 2 மாத சம்பளம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் டிச 06 : பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நிர்வாக சீர்திருத்தத்தின் கீழ் மாறுதல் அளிக்கப்பட்டு பணி புரிபவர்களுக்கு 2022 அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பெ.மோகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ம.ராஜமாணிக்கம், கா.நே.தாரகராமன், அ.நோ.யோகானந்தன், நா.முகமது யூசுப், கி.பரிமளா சு.பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஏ.ராஜேஷ்பாபு வரவேற்புரையாற்றினார்.
இதில் மாநில நிர்வாகிகள் ஜி.நாகலட்சுமி, காஜாமொய்தீன், ஜெயக்குமார், ரதி தேவி, கவிதா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் இராஜேஷ்பாபு, பாலாஜி, இளங்கோவன், மு.நல்லரசு ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார்.
கடந்த 2 மாதமாக வழங்காமல் நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தினர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் பொ.முரளி நன்றி கூறினார்.