பதிவு:2022-12-06 21:23:50
திருவள்ளூரில் சட்ட மேதை அண்ணல் டாக்டர்.பி.ஆர். அம்பேத்கரின் 66 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் மலர் தூவி மரியாதை :
திருவள்ளூர் டிச 06 : சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சட்ட மேதை டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சட்ட மேதை டாக்டர்.பி.ஆர் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு.கலைச்செல்வி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கா.காயத்ரி சுப்பிரமணி, தாட்கோ மாவட்ட மேலாளர் இந்திரா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சங்க தலைவர் ஜெய தென்னரசு,டாக்டர்.அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் நீலவானத்து நிலவன், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநில பொது செயலாளரும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ்,பழங்குடியினர் நல முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட பல்வேறு நல சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் திருவள்ளூர் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள டாக்டர் பாபாசாகித் அம்பேத்கரின் 66-வது நினைவு நாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான எஸ் சந்திரன் தலைமையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா. மு நாசர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி ராஜேந்திரன், பூந்தமல்லி எம்.எல்.ஏ வும் ஆதிதிராவிடர் நலக் குழுவின் செயலாளருமான ஆ கிருஷ்ணசாமி,மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் ஜெ.சங்கர், திருவள்ளூர் நகர செயலாளர் திருவள்ளூர் நகர்மன்ற துணை தலைவருமான சிசு ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொணடனர்.