அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகளை ஊராட்சி மன்றம் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என 43 ஊராட்சிமன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

பதிவு:2022-12-09 07:58:53

திருவள்ளூர் டிச 08 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் 43 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகளை ஊராட்சி மன்றம் மூலம் மேற்கொள்ள வலியுறுத்தி கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சி தலைவர்கள் மாவட்ட ஆட்சியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் இதுவரை வாக்களித்த மக்களுக்கு தங்களால் எந்தப் பணியையும் செய்ய முடியவில்லை.

இதனால் ஊராட்சி தலைவர்கள் அதிகாரம் குறைக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு, நலத்திட்டப்பணிகள் மேற்கொள்ளவில்லையென ஊராட்சி நிர்வாகத்தின் மீது குறைகள் சுமத்தி வருகின்றனர். இதுவரையில் ஊராட்சி தலைவராக பதவியேற்ற 3 ஆண்டுகளாகியும் எந்த ஊராட்சியிலும் ஒரு தொகுப்பு வீடுகள் கூட வழங்கவில்லை. கிராம ஊரட்சிகளுக்கு வரவேண்டிய மாதாந்திர மாநில நிதிக்குழு மானியம் காலதாமதமின்றி கிடைக்கவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட முன்னுரிமைப் பணிகள் அனைத்து ஊராட்சிகளுக்கும் தகுதிக்கு ஏற்ப ஒதுக்க வேண்டும்.

அதேபோல், மக்களவை தொகுதி, சட்டப்பேரவை மேம்பாட்டு நிதி, மாவட்ட குழு உறுப்பினர், வட்டார ஊராட்சி குழு உறுப்பினர் நிதி ஆகிய பணிகளுக்கும், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ஊராட்சிக்கு எந்த பணிகள் தேவையுள்ளதோ அதை தீர்மானத்தின் அடிப்படையில், அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் அனைத்தும் ஊராட்சிகள் மூலம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.