திருத்தணி அருகே காரில் சென்று கொண்டிருந்த நகை கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மிரட்டிய சம்பவத்தால் பரபரப்பு

பதிவு:2022-12-09 08:04:53

திருவள்ளூர் டிச 08 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அம்மையார் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அனுமந்த்குமார் . இவர் பள்ளிப்பட்டு மற்றும் அம்மையார் குப்பத்தில் அணு ஜூவல்லரி என்ற பெயரில் நகை கடை நடத்தி வருகிறார். இவர் பிரதி வாரம் செவ்வாய்கிழமை தோறும் சென்னைக்கு சென்று நகை வாங்கி வருவது வழக்கம். திருத்தணி வரை காரில் வந்து அங்கிருந்து ரயில்மூலம் சென்னைக்கு சென்று நகை வாங்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் இரவு சென்னையிலிருந்து நகை வாங்கி வந்த அனுமந்த்குமார் திருத்தணியில் நிறுத்தி வைத்திருந்த காரை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுளளார். அப்போது 2 பேர் இவரை நோட்டமிடுவதை உணர்ந்த அவர் அங்கிருந்து புறப்பட்டு ஆர்.கே.பேட்டை நோக்கி காரில் புறப்பட்டுள்ளார்.வேலன்கண்டிகைக்கும் அய்யனேரி கூட்டுச் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் செல்லும் போது காரின் பின்புறம் தாக்கியது போன்று பயங்கர சத்தம் கேட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து காரில் சென்ற அவர், ஆர்கே பேட்டை பஜாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் மர்ம நபர்கள் துப்பாக்கியில் கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவித்துவிட்டு அம்மையார்குப்பம் நோக்கி செல்கிறார். அப்போது அம்மையார்குப்பத்திற்கும், ஆர்.கே.பேட்டைக்கும் இடையில் கார் சென்றுகொண்டிருந்த போது பின்னால் இரு சக்கரவாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் காரை மடக்கி துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

ஆனால் அனுமந்த்குமார் காரை விட்டு இறங்காமல் இரு சக்கர வாகனத்தின்மீது மோதுவது போன்று வேகமாக காரை இயக்கியதால் அவர்கள் ஒதுங்கவே அனுமந்த்குமார் வேகமாக ஓட்டிச் சென்றார். இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசில் நகை கடை உரிமையாளர் அனுமந்த்குமார் புகார் அளித்தார். டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.