பதிவு:2022-12-09 08:07:04
நெற்றியில் இருசக்கர வாகனத்தின் சாவியால் குத்தி கொலை முயற்சி : ரத்தம் சொட்ட சொட்ட காவல் நிலையத்தில் இளைஞர் அளித்த புகார்
திருவள்ளூர் டிச 08 : திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் குப்பம் பகுதியைச் சேர்ந்த சுனில் என்பவர் திருமண நிகழ்ச்சிகளில் டி.ஜே ஆடியோ போடும் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் வெங்கல் பகுதியில் உள்ள பி கே பேலஸ் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிக்காக டி ஜே ஆடியோ போடும் பணியை செய்து கொண்டிருந்தார். இரவு 9.30 மணி ஆகியும் சில இளைஞர்கள் அவர்கள் சொல்லும் பாடலை ஒளிபரப்ப செய்யுமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் செம்பேடு பகுதியை சேர்ந்த சந்தோஷ். கரண். புஷ்பராஜ் .தீபத். சஞ்சல் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சுனிலை தாக்கி உள்ளனர். இதில் சஞ்சய் கையில் வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்து கொலை வெறி தாக்குதலுடன் நெற்றியில் குத்தியதில் இருசக்கர வாகனத்தின் சாவி பாதியளவுக்கு நெற்றியில் இறங்கி உள்ளது.
இதை அடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதுகுறித்து நெற்றியில் குத்திய சாவியோடு ரத்தம் சொட்ட சொட்ட வெங்கல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட நிலையில் புகாரில் காவல்துறையினர் இதுவரை வழக்கு கூட பதிவு செய்யாமல் மெத்தனம் காட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட சுனில் திருவள்ளூர் தலைமை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரு சக்கர வாகனத்திற்கு பயன்படுத்தப்படும் சாவியை ஆயுதமாக பயன்படுத்தி இளைஞரின் நெற்றியில் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது