பதிவு:2022-12-09 08:08:56
திருப்பாச்சூரில் சைடிஸ் வாங்கியதற்கு பணம் தர மறுத்து மதுபான ஊழியரை தாக்கிய திருவள்ளூர் நகர பாஜக இளைஞர் அணி தலைவர் வீடியோ வைரல் : காவல் நிலையத்தில் புகார் :
திருவள்ளூர் டிச 08 : திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் உள்ள மதுபான கடையில் கடந்த 3-ந் தேதி திருவள்ளூர் நகர பாஜக இளைஞரணி தலைவர் உதய கார்த்திகேயன் மற்றும் அவருடைய நண்பர்களுடன் மதுபான பாரில் 160 ரூபாய் மதிப்பிலான சிக்கன், ஈரல் சைடிஸ் வாங்கியுள்ளார். அதற்கு பணம் தராமல் மது அருந்திவிட்டு சென்றுள்ளனர்.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டிருந்த பாஜக நகர தலைவர் உதயா கார்த்திகேயனை பார்த்து மதுபான பார் ஊழியர் பிரசாத் வயது (31 ) அவர்களிடம் பணம் கேட்டுள்ளார்.
தன்னிடமே பணம் கேட்கிறாயா ... நான் பாஜக இளைஞர் அணி நிர்வாகி என்று கூறி அவரை தகாத வார்த்தையால் திட்டியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சர்வரை சரமாரியாக கன்னத்தில் அறைந்து அங்கிருந்து வாகனத்தில் கொலை மிரட்டல் விடுத்து தப்பியுள்ளனர் .
இது குறித்து உதய கார்த்திகேயன் மற்றும் பரந்தாமன் ஆகியோர் மீது பார் ஊழியர் பிரசாத் திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் டாஸ்மாக் கடையில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.