பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கம் மற்றும் புழல் நீர்த்தேக்கத்தின் இருப்பு நிலை மற்றும் மிகை நீர் வெளியேற்றம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நேரில் ஆய்வு

பதிவு:2022-12-13 09:34:38



பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கம் மற்றும் புழல் நீர்த்தேக்கத்தின் இருப்பு நிலை மற்றும் மிகை நீர் வெளியேற்றம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நேரில் ஆய்வு

பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கம் மற்றும் புழல் நீர்த்தேக்கத்தின் இருப்பு நிலை மற்றும் மிகை நீர் வெளியேற்றம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நேரில் ஆய்வு

திருவள்ளூர் டிச 12 : வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதை தொடர்ந்து அந்நீர் தேக்கத்தின் இருப்பு நிலை மற்றும் மிகை நீர் வெளியேற்றம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் தொடாந்து செய்தியாளர் சநதிப்பில் நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது :

நீர்பிடிப்பு பகுதியான காவேரிபாக்கத்திலிருந்தும், அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்கள் முழுவதும் பெய்து வரும் மழைநீர் அனைத்தும் இந்த பூண்டி நீர்தேக்கத்திற்;கு தான் வருகிறது. அந்த வகையில், தற்பொழுது ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகமாக மழை பெய்த காரணத்தினால் இன்றைக்கு ஏராளமான தண்ணீர் இங்கு வர ஆரம்பித்துள்ளது. பொதுவாக இந்த பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 3230 மில்லியன் கன அடி ஆகும். ஆனால் தற்;பொழுது 2,973 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இதனுடைய மொத்த ஆழம் 35 அடி ஆகும். ஆனால் 34.67 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. இந்நீர் தேக்கம் முழு கொள்ளளவு எட்டுவதற்கு சிறிதளவே மீதம் உள்ளது. ஆகையால் இந்த தண்ணீர் எதிர்பாராமல் வந்த தண்ணீர் ஆகும். முன்பெல்லாம் மழை பெய்தால் ஆங்காங்கே ஏரிகளில் தங்கி விடும். ஆனால், இப்பொழுது எல்லாம் ஏரிகளும் நிரம்பி உள்ள காரணத்தால் அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் ஓடுகிறது.

எனவே, பெய்து வரும் மழை தண்ணீர் அதனுடைய போக்கிற்கு ஏற்றாற் போல் செல்கிறது. அந்த போக்கிற்கு ஏற்றாற் போல் தண்ணீர் தடுத்து நிறுத்தி திறந்து விடப்படுகிறது. அந்த வகையில், தற்பொழுது பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கம் முழு கொள்ளளவான 35 அடி ஆழம் கொண்டதில், 34.67 அடி ஆழம் தண்ணீர் நிரம்பி உள்ளது. தற்போது நிலவரப்படி நீர்த்தேக்கத்திற்கு 10,460 கன அடி அளவில் நீர் வரத்து உளளது. இதனை கருத்தில் கொணடு தற்பொழுது நீர்வளத்துறை நிலவரப்படி 10,000 கன அடி தண்ணிர் திறந்து விடப்படுகிறது. அவ்வாறு திறந்து விடப்படுகிற தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக செம்பரம்பாக்கம், புழல் மற்றும் சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆதலால், இந்நீர் தேக்கங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் ஆறுகள், ஏரிகள், கன்மாய்கள் ஆகிய நீர் தேக்கங்களில் தண்ணீh அதிகமாக செல்வதால். ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அதுபோல் புழல் ஏரியை பொறுத்தவரை 21.20 அடி ஆழம் ஆகும். அதில் 17.80 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது தொடர்ந்து, 623 கன அடி தண்ணீர் வருகிறது. அதில் 100 கன அடி புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும், 2 அடிக்கு 30 சதவிகிதம் தண்ணீர் நிரப்பப்பட வாய்ப்பு உள்ளது. ஆதலால் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறும் இரு கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமைச்சர் கூறினார்.

இவ்வாய்வுகளின்போது, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சீபாஸ் கல்யாண்,சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்),சந்திரன்(திருத்தணி), எஸ்.சுதர்சனம் (மாதவரம்),திருவள்ளூர் சார் ஆட்சியர் மகாபாரதி, நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் முரளிதரன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் சத்திய நாராயணன், உளளாட்சி பிரதிநிதிகள், உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.