பதிவு:2022-12-13 09:48:29
திருத்தணியில் திமுக பிரமுகருக்கு கடையை வாடகைக்கு விட வேண்டும் என்பதற்காக மளிகை கடையின் பூட்டை உடைத்து பொருட்களை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வியாபாரிகள் சங்கம் சார்பில் கடைகளை மூடி போராட்டம்
திருவள்ளூர் டிச 12 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி அலுவலகம் எதிரில் தனி நபருக்கு சொந்தமான கட்டிடத்தில் திருத்தணியை சேர்ந்த ஜாபர் அலி என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடையை வேறு நபருக்கு வாடகைக்கு விடுவதற்காக கூடுதல் வாடகை கேட்டதால் ஜாபர் அலி கடையை தற்காலிகமாக மூடி இருந்த நேரத்தில் கடையின் உரிமையாளர் எந்தவித தகவலும் சொல்லாமல் கடையின் பூட்டை உடைத்து, கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்களை சூறையாடி விட்டு கடையை திமுக பிரமுகரான அருண்மொழி வர்மன் என்பருக்கு செல்போன் கடை வைக்க வாடகைக்கு விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாத நிலையில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் இடமும் இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனை அடுத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் திருத்தணி நகரம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளான பால் மருந்தகம் காய்கறி பூக்கடை வெளியிட்ட கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. கடையின் உரிமையாளர் மீதும் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த போராட்டத்தின் போது வியாபாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.