பதிவு:2022-12-13 09:56:53
திருவள்ளூர் அடுத்த அரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பாழடைந்திருப்பதை சீரமைக்க வலியுறுத்துயும் நடவடிக்கை எடுக்காததால் மழையால் வகுப்பறைக்குள் தண்ணீர் ஒழுகியதால் உட்கார முடியாத நிலை :
திருவள்ளூர் டிச 12 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுக்காவிற்குடப்பட்ட திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம் அரும்பாக்கம் கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 50 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி 46 ஆண்டுகளுக்கு முன்பு கடட்டப்பட்டதாகும். இப்பள்ளயில் அரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரும்பாக்கம், அரும்பாக்கம் காலனி, இல்லத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகள் இங்கு பயின்று வருகினறனர்.
46 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளிக் கட்டிடம் கட்டிடத்தின் மேல் பகுதி சீமை ஓடுகளால் அமைக்கப்பட்டு இருப்பதால் தற்போது அந்த ஓடுகள் உடைந்து வகுப்பறைக்குள் விழுந்து விடும். இதனால் வானம் பார்த்த பூமி போல் வகுப்பறையிலிருந்தே வானத்தை பார்க்க கூடிய நிலை இருந்தது. அதே போல் கட்டிடமும் மிகவும பாழடைந்தும் உள்ளது.
இந்நிலையில் தற்போது பெய்த மாண்டஸ் புயல் மழை காரணமாக வகுப்பறைக்குள் நீர் ஒழுகுவதால மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.கடந்த ஆண்டும் இதே போன்று பிரச்சினை ஏற்பட்ட போது சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்தும், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பள்ளி வகுப்பறையில் மழை நீர் ஒழுகும் நிலை ஏற்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.