திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

பதிவு:2022-12-13 10:10:36



திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

திருவள்ளூர் டிச 13 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 59 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 26 மனுக்களும், வேலைவாய்ப்;பு தொடர்பாக 10 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 25 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 30 மனுக்களும் என மொத்தம் 150 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அப்பொழுது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 12 பயனாளிகளுக்கு தலா ரூ.4,871 வீதம் ரூ.58,452 மதிப்பீட்டிலான விலையில்லா சலவைப் பெட்டிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், சிறு மற்றும் குறுந்தொழில் சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டத்தில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில் புரிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து வங்கி கடனாக ரூ.5,35,000 பெறுவதற்கு மானியத் தொகையாக ரூ.1,41,666-த்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், சார் ஆட்சியர் (பயிற்சி) கேத்ரின் சரண்யா,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பா.குணசேகர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கா.காயத்திரி சுப்பிரமணி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.