பதிவு:2022-12-13 10:13:00
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் அண்ணா, கலைஞர் சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றம்
திருவள்ளூர் டிச 13 : திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அலுவலகத்தில் உள்ள மன்றக் கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ஜெ.ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எம்.பர்கத்துல்லா கான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீ.காந்திமதிநாதன், இரா.வெங்கடேசன், மேலாளர் (நிர்வாகம்) ஸ்ரீராம் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், எஸ்.வேலு, ஆர்.சங்கீதா ராஜி, கே.விமலா குமார், எல்.சரத்பாபு, டி.கே.பூவண்ணன், கே.ஆர்.வேதவல்லி சதீஷ்குமார், வ.ஹரி, தி.கிருபாவதி தியாகராஜன், எஸ்.பொற்கொடி சேகர், ஆர்.திலீப்ராஜ், அ.நவமணி, வானதி, ஆகியோர் கலந்துக்கொண்டு பேசினர்.
இந்தக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் முன்னாள் தமிழக முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் சிலைகளை வைக்கவும், திருவள்ளூர் வட்டாரத்தில் மான்டஸ் புயலால் மின்சாரக்கம்பங்கள் பழுது ஏற்பட்டு மின் ஒயர்கள் அறுந்து விழுந்து மின் துண்டிப்பு ஏற்பட்டது இதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு சீரா மின்சாரம் வழங்கிய செயர் பொறியாளர் ஆர்.கனகராஜன், உதவி செயற்பொறியாளர் ஜானகிராமன், உதவி பொறியாளர் ராஜேஸ்வரி மற்றும் மின்வாரிய பணியாளர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து ஒன்றிய கவுன்சிலர் த.எத்திராஜ் கொண்டு வந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் அரண்வாயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பழுதுபார்க்க 2 லட்சத்து ஐம்பதாயிரம், 25 வேப்பம்பட்டு ஊராட்சியில் அங்கன்வாடி மையக் கட்டிடம் பழுது பார்க்க ஒரு லட்சம், 25 வேப்பம்பட்டு ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் ஃபேவர் பிளாக் சாலை அமைக்க ஒரு லட்சத்து 50 ஆயிரம், அயத்தூர் ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி பழுது பார்க்க 2 லட்சத்து ஐம்பதாயிரம், வெள்ளியூர் பழைய காலனி பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதுபார்க்க ஒரு லட்சத்து 25 ஆயிரம், வெள்ளியூர் புதிய காலனி பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டிட பழுதுபார்க்க ஒரு லட்சத்து 25 ஆயிரம், பாக்கம் கிராமத்தில் அங்கன்வாடி மையக் கட்டிடம் பழுதுபார்க்க ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நினைவெல்லாம் பட்டது.
அதேபோல் பாக்கம் ஊராட்சி பாக்கம் அருந்ததி பாளையம் பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டிடம் பழுதுபார்க்க ஒரு லட்சத்து 25 ஆயிரம், புட்லூர் ஊராட்சி ராமாபுரம் பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டிடம் பழுதுபார்க்க 2 லட்சம் , தொழுவூர் கிராம பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் பழுது பார்க்க 2 லட்சத்து 50 ஆயிரம், பேரத்தூர் காலனி குடியிருப்பு பதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் பழுது பார்க்க ஒரு லட்சத்து ஐம்பதாயிரம், சிறுகடல் பகுதியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் பழுது பார்க்க ஒரு லட்சத்து 50 ஆயிரம், தொட்டிக்கலை ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையம் கட்டிடம் பழுதுபார்க்க ஒரு லட்சம், ஈக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பழுது பார்க்க ஒரு லட்சத்து 50 ஆயிரம், புண்ணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஃபேவர் பிளாக் சாலை அமைக்க 2 லட்சத்து ஐம்பதாயிரம், உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் பழுது பார்க்க இரண்டு லட்சத்து 50 ஆயிரம், அரும்பாக்கம் ஊராட்சியில் திருக்கனஞ்சேரி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி கட்டிடம் பழுதுபார்க்க ஒரு லட்சத்து 50 ஆயிரம், அரும்பாக்கம் ஊராட்சியில் அரும்பாக்கம் கிராம பகுதியில் உள்ள இரண்டு கழிவறைகள் பழுது பார்க்க ஒரு லட்சம் நிதி என கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய்க்கு பணிகள் செய்ய நீதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது