பதிவு:2022-12-15 08:19:39
திருத்தணி அடுத்த திருவாலங்காட்டில் தமிழக அரசால் தடை செயய்ப்பட்ட 400 கிலோ குட்காவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்
திருவள்ளூர் டிச 14 : திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு பகுதியில் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலிசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள ஓம்பிரகாஷ் என்பவரின் மளிகை கடையில் சோதனை செய்துள்ளனர். மேலும் கடையின் பின்புறம் உள்ள அவரது வீட்டையும் சோதனை செய்தனர். அப்போது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிவா ஆனந்தன் என்பவர் குடியிருந்த அந்த வீட்டிலும் சோதனை செய்தனர்.
அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப், ஸ்வாகத் கோல்டு, எம்டிஎம், விமல் போன்ற 400 கிலோ எடை கொண்ட குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து தடையை மீறி குட்கா போன்ற பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திரு்நததாக ஓம்பிரகாஷ் மற்றும் சிவா ஆனந்தன் ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்தனர்.