பதிவு:2022-12-16 09:12:35
வன்னியர் மக்கள் கட்சி சார்பில் 10.5 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்தக் கோரி திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் டிச 15 : தமிழகத்தில் வன்னிய மக்களின் முன்னேற்றத்திற்காக மாநில அரசின் கல்வி, வேலை வாய்ப்பு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திருவள்ளூர் மாவட்ட வன்னியர் மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. வன்னியர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ந.சக்தி படையாட்சி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் பி.லோகேஷ் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் லோகேஷ், மாநில பொருளாளர் கோவிந்தராஜ் நாயகர், மாநிலத் துணைத் தலைவர் ராஜா தலைமை நிலைய செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய அணி பொதுச் செயலாளர் திருக்குறள் ஆறுமுகம், தமிழ்நாடு வன்னியர் வன்னியர் பேரவையின் மாநில தலைவர் ஐயப்பன், பொதுச் செயலாளர் ஆனந்த், தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம் பொதுச் செயலாளர் கண்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சுகந்த், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் சம்பத், மத்திய மாவட்ட செயலாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு 10.5 சதவீதம் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ந.வ.கணேசன், பா.சண்முகம்,எல்.ஆனந்தன், எஸ்.சுகந்த் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.