பதிவு:2022-12-16 09:14:13
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
திருவள்ளூர் டிச 15 : தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
அதனடிப்படையில் வரும் 16.12.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறும்,இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு இரத்து செய்யப்படமாட்டாது எனவும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.