பதிவு:2022-04-18 17:03:12
ரோட்டரி பிரைட் திருவள்ளூர் சங்கம் சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச விபத்து காப்பீடு திட்டம் வழங்கும் விழா
திருவள்ளூர் ஏப் 18 : திருவள்ளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ரோட்டரி பிரைட் திருவள்ளூர் சங்கம் சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச விபத்து காப்பீடு திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் ஆர்யா சீனிவாசன் தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட ஆளுநர் பரணிதரன்,மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மொத்தம் 500 ஆட்டோ ஓட்டுனருக்கு இலவச காப்பீடு வழங்க திட்டமிட்டு முதல் கட்டமாக 105 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 5 லட்சத்துக்கான இலவச விபத்துக் காப்பீட்டுக்கான ஆணையினை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கினார். இதில் வட்டார செயலாளர் பழனி,சங்க செயலாளர் வி.டிவி மோகன்,பொருளாளர் அசோகன்,உறுப்பினர்கள் ரகு,ராஜா,ஞானகுமார் உட்பட 200க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.