திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் கொள்முதலுக்கு முன்கூட்டியே நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அதிரடி உத்தரவு :

பதிவு:2022-12-20 10:39:24

திருவள்ளூர் டிச 18 : திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா 2022 பருவத்தில் 51687.664 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் அறுவடை துவங்கியுள்ள நிலையில் நேரடி நெல் கொள்முதலுக்கு 85000 மெட்ரிக் டன் நெல் வரத்து எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள அரசு கிடங்குகள், அரசுக்கு சொந்தமான கட்டிடங்களைப் பயன்படுத்தி முதற் கட்டமாக அம்பத்தூர், கடம்பத்தூர், பூண்டி, திருவாலங்காடு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் எல்லாபுரம், ஆகிய 8 வட்டாரங்களில் 38 இடங்களில் தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து நெல்கொள்முதல்; செய்ய மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

எனவே விவசாயிகள் அந்தந்த பகுதி நேரடி நெல்கொள்முதல் நிலைய இணையதளத்தில் பதிவு செய்து குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரக நெல் ரூ.2160.00–ற்கும், பொது ரக நெல் ரூ.2115.00-ற்கும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறலாம்.

இடைத்தரகர்கள் மற்றும் வெளிவியாபாரிகள் தலையீட்டால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எவ்வித புகார்களுக்கிடமின்றி விவசாயிகள் நெல் விற்பனை செய்யவும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.