ஆந்திராவிலிருந்து அடுத்தடுத்து வந்த பேருந்துகளில் கடத்தி வந்த நான்கரை கிலோ கஞ்சா பறிமுதல் : கடத்தலில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் உள்ளிட்ட ஐந்து பேர் கைது :

பதிவு:2022-12-20 10:45:15



ஆந்திராவிலிருந்து அடுத்தடுத்து வந்த பேருந்துகளில் கடத்தி வந்த நான்கரை கிலோ கஞ்சா பறிமுதல் : கடத்தலில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் உள்ளிட்ட ஐந்து பேர் கைது :

ஆந்திராவிலிருந்து அடுத்தடுத்து வந்த பேருந்துகளில் கடத்தி வந்த நான்கரை கிலோ கஞ்சா பறிமுதல் : கடத்தலில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் உள்ளிட்ட ஐந்து பேர் கைது :

திருவள்ளூர் டிச 18 : ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு திருத்தணி வழியாக கஞ்சா கடத்தி வருவது தொடர் கதையாக இருக்கிறது. இதனால் கஞ்சா குட்கா போன்ற போதை பொருட்களை கடத்தி வருவதை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.. காவல் துறை சார்பில் சோதனையையும் மீறி ஆந்திராவிலிருந்து வரும் வாகனங்களில் கஞ்சா கடத்தி வருவதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனம், ஆட்டோ, வேன்,கார், பேருந்து என கடத்தலை விதம் விதமாக அரங்கேற்றி வருகின்றனர்.

இதனை அடுத்து எஸ்.பி உத்தரவின் பேரில் தமிழக ஆந்திர எல்லையோரப் பகுதியான பொன் பாடி சோதனை சாவடியில் தனிப்படை போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர் அதன்படி நேற்று நடைபெற்ற வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து வந்த தனியார் பேருந்தை சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் மேற்கொண்டு விசாரித்ததில் திருத்தணி அடுத்த தாழவேடு பகுதியை சேர்ந்த மனோகரன், சென்னை பெரம்பூரை சேர்ந்த சந்தோஷ் குமார் மற்றும் 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடம் ஒரு கிலோ 400 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது.

இதனை அடுத்து 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்து 1400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோல் மற்றொரு பேருந்தில் சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் சோதனை செய்ததில் அவர்கள் திருத்தணி பகுதியை சேர்ந்த சுகுமார் மற்றும் அரக்கோணத்தை சேர்ந்த பாலாஜி என்பது தெரியவந்தது. மேலும் அவர்களது பையில் மூணு கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனால் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவில் இருந்து கஞ்சாவை சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த வழக்கில் 15 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் மற்ற 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கேன்சர் நோய் போல் தமிழகத்தில் கஞ்சா என்ற போதை நோய் வேரூன்றிவிட்டதால் கடுமையான தண்டனை விதித்தால் மட்டுமே ஒழிக்க முடியும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை தெரிவிக்கின்றனர்.