திருவள்ளூரில் கலை பண்பாண்டுத்துறை சார்பில் நாட்டுப்புற கலைஞர்களுக்கிடையேயான திறன் தேர்வு :

பதிவு:2022-12-20 10:49:16



திருவள்ளூரில் கலை பண்பாண்டுத்துறை சார்பில் நாட்டுப்புற கலைஞர்களுக்கிடையேயான திறன் தேர்வு :

திருவள்ளூரில் கலை பண்பாண்டுத்துறை சார்பில் நாட்டுப்புற கலைஞர்களுக்கிடையேயான திறன் தேர்வு :

திருவள்ளூர் டிச 18 : சென்னையில் தமிழக அரசு சார்பில் நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 100 வகையான கலைகளை ஆவணப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் வருகிற பொங்கல் விழாவை முன்னிட்டு சென்னையில் நம்ம ஊர் திருவிழா என்ற நிகழ்ச்சி 16 இடங்களில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பவர்களை தேர்வு செய்யும் விதமாக தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் கலைஞர்கள் குழு தேர்வு நடைபெறுகிறது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் சார்பாக திருவள்ளூரில் நடைபெற்ற இந்த திறன் தேர்வு நிகழ்ச்சிக்கு கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குனர் ஹேமநாதன் தலைமை தாங்கினார்.இதில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 தெருக்கூத்து கலைஞர்கள் குழுவினர் மஹாபாரத காவியத்தில் வரும் காட்சிகளை தனித்தனியாக அரங்கேற்றி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஒவ்வொரு குழுவிற்கும் 15 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு அதற்கேற்ப அவர்கள் நடித்து காட்டினர். அவை அனைத்தும் வீடியோவாக பதிவும் செய்யப்பட்டது. போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு குழுவிற்கும் ஊக்கத்தொகையாக 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த திறன் தேர்வு குறித்து வீடியோ சென்னையில் உள்ள தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் தேர்வு செய்யும் குழுக்கள் மட்டுமே சென்னையில் நடைபெறும் நம்ம ஊர் திருவிழாவில் பங்கேற்பார்கள் என கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குனர் ஹேமநாதன் தெரிவித்தார்.