திருத்தணியில் திமுக,பாமக,காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம் பி.யுமான கோ ஹரி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் :

பதிவு:2022-12-20 11:00:43

திருவள்ளூர் டிச 19 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் நெமிலி ஊராட்சியில் திமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் எம்பியும் கழக அமைப்பு செயலாளருமான திருத்தணி கோ.ஹரி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.அவர்களுக்கு சால்வைகள் வழங்கி கோ.ஹரி அனைவரையும் உற்சாகமாக வரவேற்றார்.

வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற அனைத்து நிர்வாகிகளும் பாடுபட வேண்டும் என அப்போது அவர் கேட்டுக் கொண்டார். மேலும் அதிமுகவின் வளர்ச்சியில் உங்கள் உழைப்பு மதிக்கப்படும் என்றும் பேசினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் கோதண்டராமன் இளைஞர் அணி பார்த்திபன் ஆகியோர் இருந்தனர்.