பொதட்டூர் பேரூராட்சியில் கழிவு நீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் : புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பொது மக்கள் அவதி :

பதிவு:2022-12-20 11:03:39

திருவள்ளூர் டிச 19 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொதட்டூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 3-வது வார்டுக்குட்பட்ட தங்கசாலை தெருவில் கால்வாயிலிருந்து வெறியேறிய கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதே நேரத்தில் வீடுகளுக்குள்ளும் இந்த கழிவு நீர் புகுந்துவிடுவதால் தொற்று நோய் ஏற்படும் சூழ்நிலையும் இருப்பதாக பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. கழிவு நீர் வெளியேற்றக்கூடிய பகுதி தனி நபருக்கு சொந்தமான இடமாக இருப்பதால் கழிவு நீரை வெளியேற்றுவதில் சிரமமாக இருப்பதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் சார்பில் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், கழிவு நீரால் சாலையில் தேங்கி நிற்பதால் பொது மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும், உடனடியாக சீரமைக்கவும் வேண்டும் எனவும் பொது மக்கள்கோரிக்கு விடுத்துள்ளனர்.