திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையம் எதிரே கண்டெய்னர் லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்து டிசல் டேங்கர் சேதமடைந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு :

பதிவு:2022-12-20 11:06:50

திருவள்ளூர் டிச 19 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட இருளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த காத்தவராயன் மகன் திவ்யகுமாரன் (18) மற்றும் அவரது நண்பர் சிபி ஆகிய இருவரும் திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த எம்எச் 46 பியூ 0230 என்ற டாட்டா கண்டெய்னர் லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த திவ்யகுமாரை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் திவ்யகுமாரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் லாரி டிரைவர் தப்பியோடியதால் காவல் துறை சார்பில் அநத் லாரியை பறிமுதல் செய்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையம் கொண்டு வந்தனர்.அப்போது லாரியை திருப்பும் போது சாலையின் தடுப்பு சுவரில் மோதியுள்ளது. இதில் டீசல் டேங்கர் சேதமடைந்து திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்தது.இது குறித்து திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். சாலையின் நடுவே லாரி நின்று போனதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா, திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து போக்குவரத்தை சீர்செய்தனர்.