ஓர் எழுத்தாளுமை எம்மை விட்டுப்பிரிந்தது, எம் என் செல்வராஜ் (வயது 86.)

பதிவு:2022-04-18 21:49:10



எழுத்தாளர் பேச்சாளர் மாணவர்களின் மணிமகுடம் , நூலகத்தின் அரசன், என பல வகையில் அழைக்கப்பட்ட ஐயா, எம் என் செல்வராஜ் அவர்கள் காலமானார். அவருக்கு வயது 86.

ஓர் எழுத்தாளுமை எம்மை விட்டுப்பிரிந்தது,  
எம் என் செல்வராஜ் (வயது 86.)

திருவள்ளூர் ஏப்ரல் 18, எழுத்தாளர் பேச்சாளர் மாணவர்களின் மணிமகுடம் , நூலகத்தின் அரசன், என பல வகையில் அழைக்கப்பட்ட எம்.என்.செல்வராஜ் அவர்கள் காலமானார்.

திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் வசித்துவந்த செல்வராஜ் அய்யா அவர்கள் அரசுப்பணியில் எழுத்து பொருள் துறையில் துணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்று, பிறகு சமூகப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மணவாள நகரில் உள்ள கிளை நூலக வாசகர் வட்ட தலைவராக பொறுப்பேற்ற பிறகு, மாவட்டத்தின் முதன்மை நூலகமாக மணவாள நகர் கிளை நூலகம் திகழ்ந்தது, சிறந்த நூலகம் என பெயர் பெற்றது. நூலக வளர்ச்சியில் இவரின் பங்கு அளப்பரியது.

ராமானுஜர், வள்ளலார் போன்ற சான்றோர்களின் வல்லமை படைத்த தெய்வீக மனிதர்களின் வரலாறையும், பண்புகளையும் நூல்களாக எழுதி அனைவரும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் பல புத்தகங்கள் படைத்திருக்கிறார்.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றம் அரங்கில் வருடந்தோறும் மார்கழி திங்கள் நாளில் நடைபெறும் விழாவில் தமிழிசை பாடல்களை, விழா முதல் பாடலாக எம்என்.செல்வராஜ் அவர்கள் எழுதிய பாடல்கள் அரங்கேற்றுவது வழக்கம்.

ஐயா அவர்கள் பாடல் இயற்ற சீர்காழி கோவிந்தராஜ் அவர்கள் பாடலை பாடி செவிக்கு விருந்து அளித்திருக்கிறார்கள்.

எம். என்.செல்வராஜ் ஐயா அவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள், உள்ளனர். பேரன் பேத்தி பேரு பெற்று பெருவாழ்வு வாழ்ந்த ஐயா எம். என் செல்வராஜ் அவர்கள் இன்று காலை 9 மணி அளவில் இயற்கை எய்தினார், அவரின் இழப்பு தமிழ் சமூகத்தின் பேரிழப்பு..

அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை 19-4-2022 காலை 10 மணி அளவில் நடைபெற இருக்கிறது ..