பதிவு:2022-12-20 11:11:22
திருவள்ளூரில் உலக நன்மை வேண்டி ஐம்பொன் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 24-ம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை :
திருவள்ளூர் டிச 19 : திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரில் உள்ள ஸ்ரீஐம்பொன் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 24-வது ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சேவா சங்கத்தின் குரு சுவாமிகள் எஸ்.ராஜ்குமார், ஏ.ருக்மாங்கதன், எஸ்.கோபால கிருஷ்ணன் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏற்பாட்டில் கடந்த 23 ஆண்டுகளாக இந்த திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.
கல்வி, திருமண தடை, வேலை வாய்ப்பு, குழந்தையின்மை, தொழிலில் முன்னேற்றம் உலக நன்மை போன்ற எந்த வேண்டுதலாக இருந்தாலும், இந்த திருவிளக்கு பூஜையில் பங்கேற்றால் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகமாக உள்ளது.
இதனால் இந்த பூஜையில் கலந்து கொள்ள பெண்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் 24-வது ஆண்டாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று ராகு கால பூஜையாக நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜையில் ஸ்ரீவித்ய உபாஸகர் வேதாந்த இராமமூர்த்தி கலந்து கொண்டு வேத மந்திரங்கள் சொல்ல திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள் அதனை சொல்லி பூஜையில் ஈடுபட்டனர்.
பூஜையில் பங்கேற்றவர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு வேத மந்திரத்தை சொல்லி வழிப்பட்டனர்.இந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை வழிபட்டு சென்றனர்.