திருவள்ளூரில் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல பணிக்காலியிடங்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் : வளர்ச்சி கூடுதல் ஆட்சியரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலருமான செ.ஆ.ரிஷப் துவக்கி வைத்தார் :

பதிவு:2022-12-21 10:00:08

திருவள்ளூர் டிச 20 : திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய அரசின் இளநிலை செயலக உதவியாளர், கீழ் பிரிவு எழுத்தர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ~அ~ போன்ற பல பணிக்காலியிடங்களுக்கான எஸ்.எஸ்.சி., சி.எச்.எஸ்.எல்., இலவசப் பயிற்சி வகுப்பினை திருவள்ளூர் கூடுதல் ஆட்சியரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலருமான செ.ஆ.ரிஷப் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து, தேர்வுக்கான இலவச கையேடு வழங்கி தலைமையுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் 181 தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் க.விஜயா, தமிழ் பேராசிரியர் லஷ்மி, டாப் ஐ.ஏ.எஸ் அகாடமி ரமேஷ், திட்ட மேலாளர் (பயிற்சி) வினோத்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) ஜி.ந.காமராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.