திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

பதிவு:2022-12-21 10:45:07



திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

திருவள்ளூர் டிச 20 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 97 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 88 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 20 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 55 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 78 மனுக்களும் என மொத்தம் 338 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பாக போக்குவரத்து வசதி இல்லாத பழங்குடியினர் மாணவர்கள் கல்வி கற்றிட ஏதுவாக அவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தருகின்ற வகையில் 6 பள்ளிகளில் பயிலும் 73 பழங்குடியின மாணவர்களுக்கு மாதம் தலா ரூ.52,000-ம் வழங்கும் விதமாக இந்த மாதத்திற்கான காசோலையை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பின்னர் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,75,000-த்திற்கான திருமண உதவித்தொகைகளை பெறுவதற்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கு சட்ட படிப்பு முடித்து வழக்கறிஞர்களாக பதிவு செய்ய உரிய கட்டணம் செலுத்துவதற்கும், சட்ட புத்தகங்களை கொள்முதல் செய்வதற்கும் தலா ரூ.50,000-ம் வழங்;கும் திட்டத்தின் கீழ் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.50,000-ம் பெறுவதற்கான ஆணையினையும், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளியின் பாதுகாவலருக்கு பாதுகாவலர் சான்றிதழையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், சென்னை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி அலுவலக உதவி இயக்குநர் கிரன்தேவ் சதுலுரி, தனித்துணை ஆட்சியர் பி.ப.மதுசூதணன்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ச.மலர்கொடி, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஆர்.சேகர், சர்வசிக்ஷா அபியான் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கா.காயத்திரி சுப்பிரமணி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தொழில் முனைவோர்கள், தொழிற்பேட்டை சங்கங்களைச் சேர்ந்த தலைவர் மற்றும் செயலாளர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.