வேப்பம்பட்டில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பாக ஸ்மார்ட் வகுப்பறைகளாக புனரமைத்த குழந்தைகள் மையம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்து பார்வையிட்டார் :

பதிவு:2022-12-21 10:50:49



வேப்பம்பட்டில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பாக ஸ்மார்ட் வகுப்பறைகளாக புனரமைத்த குழந்தைகள் மையம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்து பார்வையிட்டார் :

வேப்பம்பட்டில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பாக ஸ்மார்ட் வகுப்பறைகளாக புனரமைத்த குழந்தைகள் மையம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்து பார்வையிட்டார் :

திருவள்ளூர் டிச 20 : திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், வேப்பம்பட்டு பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பாக செயல்பட்டு வரும் குழந்தைகள் மையத்தை "சானிடேஷன் ஃபர்ஸ்ட் இந்தியா" என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதி ரூ.14 இலட்சம் மதிப்பீட்டின் மூலம் புனரமைத்து ஸ்மார்ட் வகுப்பறைகளாக புதுப்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அம்மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்து, பார்வையிட்டு, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குழந்தைகளோடு கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் 13 வட்டாரங்களில் 1760 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் 2 வயது முதல் 5 வயதுக்குட்பட்ட 42 ஆயிரம் குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையம் மூலம் விளையாட்டோடு முன்பருவக் கல்வி மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் படிப்படியாக மேம்படுத்தும் பணிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதில்; ஒரு பகுதியாக, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பம்பட்டு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் சானிடேஷன் ஃபர்ஸ்ட் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் ரூ.14 இலட்சம் செலவில் ஸ்மார்ட் டி.வி., கண்காணிப்பு கேமராக்கள், வெளிப்புற விளையாட்டு உபகரணங்கள், ஊட்டச்சத்து தோட்டம், மைய சுற்றுசுவர், கழிப்பறை மற்றும் குழந்தைகளுக்கான கழிப்பறை, மழைநீர் சேகரிப்பு தொட்டி, பாடங்கள் சம்மந்தமான ஓவியங்கள், உட்புற, வெளிப்புற சுற்றுசுவர்களில் வரையப்பட்டு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் இம்மையம் மாற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு தரமான நவீன முறையில் கல்வி அளிக்கப்படும். கடந்த அக்டோபர் மாதம் நமது மாவட்ட ஆட்சியர் அறிவித்தவாறு அங்கன்வாடி மையம் முதன் முறையாக திருவள்ளூர் மாவட்டத்தில் வேப்பம்பட்டு ஸ்மார்ட் அங்கன்வாடி மையம் செயல்படும் விதமாக மாவட்ட ஆட்சியரால் இம்மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் வளர்ச்சி கூடுதல் ஆட்சியரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலருமான செ.ஆ.ரிஷப்,திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், துணைத் தலைவர் பர்க்கத்துல்லாகான், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா,திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதி நாதன், வெங்கடேசன், சானிடேசன் ஃபர்ஸ்ட் இந்தியா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பத்மபிரியா, உள்ளாட்சி பிரதிநிதிகள், அங்கன்வாடி மையப் பணியாளர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.