பதிவு:2022-12-21 10:59:40
ஆவடியில் வீட்டு உபயோக சிலிண்டரில் உள்ள ரெகுலேட்டர் சரியாக பொருத்தாததால் கேஸ் கசிவு ஏற்பட்டு விபத்து : மூன்று பேருக்கு தீ காயம் :
திருவள்ளூர் டிச 21 : ஆவடி கோயில் பதாகையில் கலைஞர் நகரில், வீட்டில் சமைக்கும் போது எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அதில் ரோஜா (64),சங்கர் ராஜ் (41),கீர்த்திகா (11) ஆகிய மூவருக்கும் தீக்காயம் ஏற்பட்டு தற்போது அனைவரும் ஆவடி அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் ரோஜா என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி தேனிப்பு மீட்பு படையினர் தீயை அணைத்தனர் மேலும் வீட்டில் இருந்த மூவரும் ஆம்புலன்ஸ் மூலம் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டு உபயோக சிலிண்டரில் உள்ள ரெகுலேட்டர் சரியாக பொருத்தாததால்கேஸ் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது.கடந்த மாதம் கேஸ் கசிவு பிரச்சனை ஏற்பட்டு புதிய ரெகுலேட்டரை வழங்குமாறு இண்டேன் கேஸ் நிறுவன ஊழியர்கள் கூறியிருந்த நிலையில்.அதை சரி செய்யாமல் பயன்படுத்தியதால் இந்த விபத்து நடந்த நடந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் விபத்து நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன் கேஸ் கசிவு ஏற்பட்டு அக்கம் பக்கத்தினர் எச்சரித்தும் அதை சரி செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.