பதிவு:2022-12-21 11:06:55
திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய வட்டங்களுக்குட்பட்ட 227 குடும்பங்களுக்கு சுமார் ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் டிச 21 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் இருளர் இன மக்கள், கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட மக்கள் மற்றும் ஆவாஸ் திட்ட இனங்களின் கீழ் வசிக்கும் மக்கள் ஆகியோர்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றதைத் தொடர்ந்து திருத்தணி தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய வட்டங்களுக்குட்பட்ட 227 குடும்பங்களுக்கு சுமார் ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு திருத்தணி வட்டத்திற்குட்பட்ட வி.கே.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த 14 பயனாளிகள், இராஜபத்மாபுரம் கிராமத்தை சேர்ந்த 15 பயனாளிகள், சின்னகடம்பூர் கிராமத்தை சேர்ந்த 16 பயனாளிகள், சூரியநகரம் கிராமத்தை சேர்ந்த 36 பயனாளிகள், நெடும்பரம் கிராமத்தை சேர்ந்த 1 பயனாளி, பொன்பாடி கிராமத்தை சேர்ந்த 42 பயனாளிகள், முத்துக்கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த 21 பயனாளிகள், மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 7 பயனாளிகள், தாடூர் கிராமத்தை சேர்ந்த 1 பயனாளிகள், வீரகநல்லூர் கிராமத்தை சேர்ந்த 3 பயனாளிகள், அகூர் கிராமத்தை சேர்ந்த 11 பயனாளிகள், இராமாபுரம் கிராமத்தை சேர்ந்த 7 பயனாளிகள் என மொத்தம் 12 கிராமங்களை சேர்ந்த 174 பயனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
மேலும், ஆர்.கே.பேட்டை வட்டத்திற்குட்பட்ட எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தை சேர்ந்த 16 பயனாளிகள், அஸ்வரேவந்தபுரம் கிராமத்தை சேர்ந்த 19 பயனாளிகள், வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த 11 பயனாளிகள், வெள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த 3 பயனாளிகள் என மொத்தம் 4 கிராமங்களை சேர்ந்த 49 பயனாளிகளுக்கும் மற்றும் பள்ளிப்பட்டு வட்டத்திற்குட்பட்ட கீளபூடி கிராமத்தை சேர்ந்த 3 பயனாளிகள், அத்திமான்சேரி கிராமத்தை சேர்ந்த 1 பயனாளி என மொத்தம் இரண்டு கிராமங்களை சேர்ந்த 4 பயனாளிகளுக்கும் என மொத்தம் 18 கிராமங்களை சேர்ந்த 227 பயனாளிகளுக்கு ரூ.2,09,98,586 மதிப்பிலான 21,720 சதுர மீட்டர் பரப்பளவு இடத்திற்கான இலவச வீட்டுமனை பட்டாக்களை பால்வளத்துறை அமைச்சர் வழங்கினார்.
இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஜெ.ஹஸ்ரத் பேகம், திருத்தணி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தங்கதனம் தங்கராஜ், ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா, வட்டாட்சியர்கள் வெண்ணிலா, ரமேஷ், தமயந்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.