பதிவு:2022-12-24 21:13:48
திருத்தணியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை :
திருவள்ளூர் டிச 23 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த அனுமன் ஜெயந்திவிழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், பூஜைகளும் நடைபெற்றது.
1008 மிளகு வடையால் மாலை அணிவித்தும், பாதாம் முந்திரியால் தயாரிக்கப்பட்ட 5 கிலோ வெண்ணையை கொண்டு அலங்காரமும் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர்.பெண்கள் அனைவரும் ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். அனுமன் ஜெயந்திவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.