பதிவு:2022-12-24 21:22:12
அம்பத்தூரில் சொத்து தகராறில் உடல் முழுவதும் காப்பர் ஒயரை சுற்றி மின்சாரம் பாய்ச்சு ஒருவர் தற்கொலை :
திருவள்ளூர் டிச 23 : அம்பத்தூர் ராம்நகர் அடுத்த பத்மாவதி சீனிவாசன் நகரை சேர்ந்தவர்முத்து குமாரசாமி வயது 55 கடந்த பல வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்தவர் ஒரு மாதத்திற்கு முன்னர் அம்பத்தூற்கு வந்தார் இந்நிலையில் தான் சம்பாதித்த பணத்தில் அம்பத்தூரில் சொந்த வீடு வாங்குவதற்காக மனைவியிடம் கூறியதாக தெரிகிறது.
அதற்கு மனைவி இப்போது எதுவும் வேண்டாம் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு அந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார் இதனால் மனம் உடைந்து இரு நாட்களாக காணப்பட்டவர் நேற்று இரவு தனது அறைக்கு தூங்க சென்றார் இன்று காலை 9 மணி வரை கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி மற்றும் மகன்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர்.
அப்பொழுது உடல் முழுவதும் காப்பர் வயரை சுற்றிக்கொண்டு அதை மின் இணைப்பில் பொருத்தி முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது இது குறித்து அம்பத்தூர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் குமாரசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர் மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.