பதிவு:2022-12-24 21:24:24
பெரியபாளையம் அருகே டிகடையில் குட்கா விற்றவர் கைது 75 கிலோ குட்கா பறிமுதல் :
திருவள்ளூர் டிச 23 : திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் சுற்றுப்பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பெரியபாளையம் அருகே டிக்கடையில் குட்கா விற்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து பேலீசார் சோதணை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சுமார் 75கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் பெரியபாளையம் பகுதியை சேர்ந்த மகேந்திர குமார் (40) என்பவரை கைது செய்தனர்.
இதுகுறித்து பெரியபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் பயன்படுத்தி புழல் சிறையை அடைந்தனர் மேலும் குட்கா பொருட்கள் மொத்தமாக எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.