மேலானூர் - மெய்யூர் கொசசஸ்த்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் அவதி :

பதிவு:2022-12-24 21:26:14

திருவள்ளூர் டிச 23 : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மேலானுர் மெய்யூர் வழியாக திருவள்ளூர் செல்லும் சாலை நெடுஞ்சாலை துறை மற்றும் கிராம சாலைகள் 2018 −2019 திட்டத்தின் படி கொசசஸ்தலை ஆற்றின் குறுக்கே சுமார் 13 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் 2020 ஆண்டு ஜுன் மாதம் கடந்த அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கட்டுமானபணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் மாண்ட புயல் காரணமாக கனமழையால் மெய்யூர் வழியாக திருவள்ளூர் செல்லும் தரைப்பாலும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த தரைப்பாலத்தை பயன்படுத்தி வந்த 17 கிராமங்கள் வசிக்கும் சுமார் 6000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் அன்றாட பணிக்கு திருவள்ளூர் செல்வதற்கு சுமார் 25 கிலோமீட்டர் சுற்றி சென்று வருவதாகவும் வருவதால் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை முறையிட்டும் பலன் அளிக்கவில்லை என்று வேதணை தெரிவிக்கின்றனர் மேலும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மேம்பால பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடியா அரசின் விடியலை நோக்கி காத்து கிடக்கின்றனர்.